பெண் என்பவளை பஞ்சபூதங்களுடன் நாம் ஒப்பிடுகிறோம் நீர், நிலம் , காற்று ,ஆகாயம், நெருப்பு . ஆம் நீங்கள் அவளை போற்றும் போது அவள் குடிநீராக, இளந்தென்றலாக, பசுமையான நிலமாக, விளக்கின் ஒளியாக, சலனமில்லா ஆகாயமாக மிக மென்மையாக இருக்கிறாள். ஆனால் அதுவே அவளை ஓடுக்க நினைக்கும் பொழுது ஆழிப்பேரலையாகவும், சுழட்டி அடிக்கும் சூறாவளியாகவும், அண்டத்தையே சாம்பளாக்கும் அக்கினி ஜீவாலையாகவும், அக்கிரமத்தை தன் உள் வாங்கும் புகம்பமாகவும்,இடி ,மின்னல் தெறிக்கும் ஆகாயமாகவும் மாறுவாள் பெண்.
அத்தகைய மெல்லிய மனம் கொண்ட நம் கதாநாயகியை , இரும்பாக மாற்றி இயந்திரமாய் உலாவ விட்டு இருக்கிறது இந்த சமூகம்….ஆம் பேருந்து பயண கூட்டத்தில் எத்தனை தடவல்கள், பணியிடத்தில் எத்தனை எச்ச பார்வைகள் , முன்னேற துடிக்கும் போது எத்தனை முட்டு கட்டைகள் , வசை பாடுகள் .
இதையெல்லாம் சகித்து அவள் போகின்றாள் யாருக்காக அவள் குடும்பத்திற்காக.
இவை ஒன்றும் அவள் முன்னேற்றத்தை தடுத்து விடாது தடை தாண்டி செல்லும் வலிமை அவளிடம் உண்டு.
இதனிடையே காதல், அது ஒருபக்கம் மெல்லிய ஓடையாக அவள் மனதின் ஓரமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.
அத்தகைய காதலை பெற பொருத்தமானவன் அதை பெற்றுக்கொள்ள வருவான்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் ஒரு நாள் அது கடந்து போகும் , நம்பிக்கை வைத்து நடைபோட வேண்டும் நெஞ்சம் நிமிர்த்தி , நேர் கொண்ட பார்வையோடு…
இது ஒரு எதார்த்தமான,இயல்பான சமூக தாக்கம் கொண்ட கற்பனை கதை .







Reviews
There are no reviews yet