எனது கதைகள் அனைத்துமே பேரன்பு மற்றும் அறம் பேசும் கதைகள் தான். ஆம், மனிதனின் அறியாமை, தவறு, பொய், கோபம், காதல், நட்பு, திருட்டு, இயலாமை போன்றவற்றின் மூலம் அறத்தையும், பேரன்பையும் பேசும் கதைகள்.
இந்த சிறு கதைத் தொகுப்பை படித்து முடித்தபின், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நீங்கள் உணர்ந்தாலோ, உங்களது கோபம் ஒரு சொட்டு குறைத்தாலோ, ஒருவித அமைதியும், சாந்தமும் அடைந்தாலோ, ஒரு நிம்மதியான சிரிப்பு சிரித்தாலோ, முன்பு செய்த ஒரு செயலை நினைத்து வருந்தினாலோ, சக மனிதனை பேரன்புடன் நேசிக்க ஆசைப்பட்டாலோ அல்லது உலகத்தில் முழுமையான சரியென்றோ, தவறென்றோ ஒன்று இல்லை என அறிந்தாலோ அதை எனது புத்தகத்தின் வெற்றியாகக் கருதுவேன்.







Reviews
There are no reviews yet