யார் அங்கே? யார் அங்கே? யார் அங்கே? இந்த வார்த்தைகளை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதே தான் எனக்கும் தோன்றுகிறது! ஒரு அரசரோ இளவரசரோ அரச குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவரோ அதிகாரத்தில் இருக்கும் யாரோ அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாகத்தான் இந்த வார்த்தை நமக்கு தோன்றும் ! அரசர் காலத்து கதை என்றாலே போர்க்களம், காதல், மந்திரம், தந்திரம், நயவஞ்சகம், சதி, இப்படி எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாத ஒரு ஊசி முனையில் ஒட்டுமொத்த நாட்டையே சமமாய் இடப்பக்கமும் வலப்பக்கமும் ஆடாமல் மேல் திசையிலும் கீழ் திசையிலும் சரியாமல் நேர் நிலையில் நிறுத்துவதற்காக அரசர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் ஒவ்வொரு சூழ்நிலையும் நம்மை ஆச்சரியத்தில், ஆரவாரத்தில், பயத்தில், எதிர்பார்ப்பில் இன்னும் எத்தனை எத்தனையோ உணர்வுகளில் ஆழ்த்தும்!
எதற்குமே குறை வைக்காமல் அப்படித்தான் என்னையும் அழுத்தியது எழுத்தாளர் திரு அ.மனோஜ்குமார் அவர்களின் சிவப்பு தேசம்!
எழுத்தாளர் உயர்திரு கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், எழுத்தாளர் உயர்திரு சு வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி, என்னை கற்பனை கடலில் மிதக்க வைத்ததோ அதே அளவுகோலில் சிவப்பு தேசமும் என்னை கற்பனையில் மிதக்க செய்தது என்பதை நான் தைரியமாக எழுதுகிறேன்!







Reviews
There are no reviews yet