அனுபவங்களும் அலைச்சல்களும் ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் இரட்டைப் பிறவிகள் போல தொடர்புடையது. அலைச்சல் அதிகம் இருப்பவனுக்கு அனுபவங்களும் அதிகம் கிடைக்கிறது. அலைச்சல் என்று குறிப்பிடுவதால் ஒருவன் வெளியில் தெருவில் அலைய வேண்டுமென்றல்ல, அவன் மனது அலைந்தாலே போதும். மனதில் எழும் கேள்விகளை தேடி அலைந்தாலே, அது அலைச்சல் என்று ஆகிவிடும்.
சமூகத்தில் நிகழ்வதை கண்டு, ஏன் இப்படி நடக்கிறது? இதன் அடிப்படை என்ன? இது முதலில் எங்கு உருவாகி இருக்கும்? முதலில் இந்த செயலை யார் செய்திருப்பார்? என்று பல கேள்விகள் தோன்றும் ஒவ்வொருவரும் அலைச்சல்வாதிகள் தான்.







Reviews
There are no reviews yet