திடீரென வெளிச்சம் குறைகிறது, இருள் போல ஒரு இருள் சூழ்கிறது. நீல நிற வானம் விடுமுறை எடுத்துக்கொண்டதாக தகவல் கிடைக்கிறது, இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு, வேகமாக வெளியில் ஓடி வந்து வானை அண்ணார்ந்து பார்க்கிறீர்கள்.
கருநிற மேகங்கள் வம்படியாக சூழ்ந்து வானில் மை பூசுகிறது, காற்றில் குளிர் பூசுகிறது, மனதில் இதம் பூசுகிறது, ஆடையால் மறைக்கப்படாத உடல் பகுதிகள் கட்டுப்பாடின்றி காற்றில் வேர்விடுகிறது,
சற்று நேரத்தில் அங்கே ஒரு சாரல் மழை பெய்கிறது!
நனைந்து விட போகிறது புத்தகம் பத்திரம்…!







Reviews
There are no reviews yet