யாருமில்லா தனிமையில்…
காதல் காலத்து பாடல் காதில் வந்து விழ, மனம் அதை நோக்கி பயணிக்கும்…
வாசனை நிறைந்த ஒரு கடந்த காலம் துறுதுறுவென வேகமெடுத்த கால்கள் எப்போதும் எப்போது என ஏங்கிய தருணங்கள் பல மணி நேரம் இருந்தாலும் பக்கம் இருந்தது மட்டும் பதிந்து போகும்
ஒரு பார்வைக்காக பல வெயில் தாங்கியிருப்போம்
ஒரு சிரிப்பிற்காக பல வேடிக்கை செய்திருப்போம்
ஒரு அழைப்பிற்காக பல தூது அனுப்பிருப்போம்
ஒரு அணைப்பிற்காக பல முறை முயற்சித்திருப்போம்
ஒரு முத்தத்திற்காக பல இதயம் கொண்டு துடித்திருப்போம்
கடைசியில் பார்த்துவிட்டாவது செல்வோமென ஏங்கியிருப்போம்
நினைக்க நினைக்க பசி மறந்திருப்போம்
நீயில்லாமல் என்னாவேனோ என தவித்திருப்போம்
பேச்சிழந்து கட்டி அணைத்திருப்போம்
கண்ணீரினாலே கதைகள் பல பேசியிருப்போம்
கட்டிக் கூந்தலில் புரண்டு தூங்கியிருப்போம்
காதோர சிகையை பெருமூச்சினால் அசைத்திருப்போம்
கொஞ்சல்களில் கடிகாரம் மறந்திருப்போம்
உணர்வுகள் மட்டும் என்றும் ஊமையானதில்லை
உயிர் துடிக்கும் சத்தம் இன்றும் மறக்கவே இல்லை
சில ஞாபகங்கள் மனம் துளைக்கும்
சில பாடல்கள் அதை நினைக்கும்
சில தனிமைகள் அதனோடு பயணிக்கும் வாருங்கள் சேர்ந்தே தொடருவோம் இந்த பயணத்தை…







Reviews
There are no reviews yet