எழுத்தோடு இனைத்து எட்டாத தூரங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கற்பனை பயணமும், பிரபஞ்சத்தின் எல்லை கோட்டை தீண்டிய பின்பும், ஏனோ பின்வாசற் கதவுகளையும் தேடுகிறது. தப்பி சென்றாவது தாகம் தீர்த்துகொள்ள முடியாதா என்ற ஏக்கம் கற்பனைக்கு எப்போதும் உண்டு. “கற்பனை” பெரும்பாலும் சித்தரிக்கப் பட்டவையே என்றபோதும், சித்தரித்த சிற்பிக்கே முழு உரிமையையும் கொடுத்துவிட முடியாது. சிற்பத்தின் நடை, உடை, நிறம், உயரம் போன்ற எல்லாவற்றையும் சிற்பி தீர்மானித்தாலும், சிற்பத்திற்கு உயிரூட்டி குரலூட்டுவாராயின், குரலின் திடம், அழகு, இனிமை, பயம், அருவருப்பு, கனம் போன்ற சில அம்சங்கள் வாசகரின் கற்பனை உலகில் எல்லை கோடின்றி சுதந்திர சிறகு கொண்டு பலவந்தமில்லாமல் பறந்து மகிழ்கிறது. சிற்பி தனது கற்பனையில் உதித்த கலையமைப்பு வரும்வரை உழைக்கிரான், பெரும் ஆர்வத்துடனும் அர்ப்பனிப்புடனும் உழைக்கிரான், கண்கள் சிவக்க உழைக்கிரான், கைகள் சிவக்க உழைக்கிரான், சிந்தனை சிவக்க உழைக்கிரான். உழைப்பின் மொத்த உருவமாக சிற்பம் உருவாகுமா என்றால்..?
தெரியவில்லை..!
“சிற்பிக்கு கைகள் சிவந்தால்
சிற்பங்கள் அழவா போகிறது”
சிற்பம் என்று குறிப்பிடுவது கற்சிலைகளை மட்டுமல்ல..!







Reviews
There are no reviews yet