இந்த கவிதை தொகுப்பை “ழகரன்” என்ற பெயரில் எழுதி வருகிறேன். தமிழுக்கே உரிய சிறப்பு “ழ”கரத்தை சிறப்பிக்க வேண்டுமென இந்த பெயர் வைத்தேன்.
என் “நிழலற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதை தொகுப்பை ஒருவனின் அன்றாட வாழ்வில் நடைபெறும் சிறு சிறு அழகான அனுபவங்களையும், நான் சந்திக்க நினைத்த சிலரின் கற்பனை நினைவுகளோடு என் காதல், காமம், நட்பு, தனிமை, உறவுகள் மற்றும் இன்னமும் சாகாமல் இருக்கும் சாதியை பற்றியும், இல்லாத இறை நம்பிக்கை பற்றியும் எடுத்துரைத்து உள்ளேன். நான் கண்ட அனுபவத்தின் உணர்ச்சி தான் இக்காகிதங்கள்.







Reviews
There are no reviews yet