நம் விரல்கள் கட்டியணைத்த தருணம்
நிஜம் கூட தள்ளிப் போய் இளைப்பாறும்
உலகமே ஒரு நொடி வேகமெடுக்கும்
உன்னதமே உனதென்று உயிர்மழை பொழியும்
பகலவனும் பாதி மங்கும்
பனைமரக்காற்றும் காடு சூழும்
ஒய்யாரமாய் குயிலும் பாடி திரியும்
ஒற்றைக் கண்ணீரும் நீ தொட்டால் குளமாகும்
உனை நினைக்கையிலே உயிரும் உச்சம் தொடும்
உனை அணைக்கையிலே பொன்னிற்கும் பொறாமை வரும்
உன் கால் விரல்பட்டால் குளத்தங்கரையும் குத்தாட்டமிடும்
உன் கணுக்கால் தெரிந்தால் குளத்து மீனும் குதூகலமாகும்
உன் கொலுசொலியிலே காடெல்லாம் கனவுகள் காணும்
உன் கண்ணொளியிலே மின்னொளியும் மங்கிப் போகும்
உன் கால் சேர கடல் அலையும் அமைதி களையும்
உன்னுடன் அமர்ந்து பேச காற்றும் கட்டாந்தரை தேடும்
தமிழ் – காதல் – மழை – கவிதை – காதலர்கள்
இவர்கள் தான் இந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள்.
வாருங்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் நனைவோம்
இந்த காதல் மழையில்






Reviews
There are no reviews yet