ஒரு மனிதன் எப்படி பிற மனிதர்களால் பல்வேறு விதத்தில் புரிந்துகொள்ள படுகிறானோ அதே போல் கவிதையும் பல்வேறு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். அது வெளிப்பட்டது அவன் வாழ்ந்த குழலும் அவன் மன ஓட்டத்தையும் பொருத்து அமையும்.
இந்த தொகுப்பில் சில கவிதைகள் கடுமையாக இருப்பதாக சிலருக்கு தோன்றும். அது சாதிய மனநிலை நிறைந்துள்ள மனிதர்கள் மீது ஏற்படும் ஒரு சாமானியனின் கோபத்தின் வெளிப்பாடே. கவிதை சத்தம் போடக் கூடாது என்பார்கள். சிலருக்கு சிலதை சத்தமாகத்தான் சொல்ல வேண்டியுள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் கூட சத்தமாக சொல்வேன் “பிறப்பால் யாரும் மேலானவன் இல்லை அனைவரும் சமம்”







Reviews
There are no reviews yet