உள்ளம் என்பது நம் கனவுகளினால் நிறைந்து மகிழ்ச்சியடையக்கூடியது. அதனை ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைக்காதீர்கள். இதயம் கையளவு என்று அழைக்கலாம். ஆனால் அதன் உள்ளே இருக்கும் மனதிற்கு அளவே கிடையாது. அது மிகவும் சுதந்திரமானது. அது ஒரு சிறிய தீப்பொறியை பெரிய காட்டுத்தீயாகவும் மாற்றும். அழகிய தீபமாகவும் மாற்றும். அணைத்து விடாதீர்கள். அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு எல்லைகளை விதிக்காதீர்கள். நாம் செல்ல முடியாத இடத்திற்கு எல்லாம் அது சென்று வரும் வலிமை கொண்டது. நாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து போய் பார்க்க வேண்டிய இடத்தை அது இலவசமாக பார்த்து வந்துவிடும்.
“நம் கண்களுக்கு தடைகள் தெரியும்.
நம் அறிவு கூட அதை வேண்டாம் என தடுக்கும்.
ஆனால் நம் மனது மட்டும் மனது வைத்தால்
தடைகள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும்.”







Reviews
There are no reviews yet