இப்படி தான் இருக்க வேண்டும் என்று
நிர்பந்திப்பதில்லை காதல்…
“நீ நீயாகவே இரு”
என்பதே காதல்!
நிறமோ, வடிவமோ
தேடுவதில் இல்லை காதல்…
நிஜமான உள் அன்பை
நேசிப்பதே காதல்!
அங்கங்களில் ருசி
தேடுவதில்லை காதல்…
ஊனாய், உயிராய்
ஒன்றாய் கலப்பதே காதல்!
காதலை காதலால்
காலம் காலமாக
காதலியுங்கள்…
எந்த நிலையில் இருந்தாலும்
காதல்… காதல் தானே!







Reviews
There are no reviews yet